நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் டிச. 19 வரை நீடிப்பு | தினகரன்

நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் டிச. 19 வரை நீடிப்பு

நாலக்க டி சில்வாவின விளக்கமறியல் டிச 19 வரை நீடிப்பு-Nalaka De Silva Re Remanded Till Dec 19

தீவிரவாத விசாரணை பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வாவுக்கு எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான இந்திய நாட்டவருக்கும் எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.


Add new comment

Or log in with...