கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மூவரில் இருவர் பலி | தினகரன்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மூவரில் இருவர் பலி

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மூவரில் இருவர் பலி-Attempt to Murder-2 Killed-1 Injured

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையிலிருந்த மூவர், இரத்தினபுரி பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

நேற்று (09) இரவு சுமார் 9.00 - 10.00 மணியளவில், இரத்தினபுரி, கொரக எல, தெப்பனாவ வீதியில் மின்மாற்றி ஒன்றுக்கு அருகில் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மூவரை பொலிசார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்தோர், 34, 35 வயதுடைய கொரக எல, தொடம்பே பிரதேசத்தைச் சேர்ந்த நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர்களின் சடலங்கள் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு காயமடைந்தவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பில், இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...