அமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்து: ஆறு பேரை காணவில்லை | தினகரன்

அமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்து: ஆறு பேரை காணவில்லை

தெற்கு ஜப்பானில் இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் மாயமாகி உள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியில் ஜப்பான் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான பயற்சிக்காக 2 பேருடன் சென்ற எப் –18 பைட்டர், 5 பேருடன் சென்ற கேசி–130 டேங்கர் ஆகிய இரண்டு விமானங்களும், தெற்கு ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டபோது ஜப்பான் கடற்கரையின் மியோட்டோவில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது.

இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரின் நிலைமை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவத்துள்ளதுடன், விபத்துக்கான சூழல் மற்றும் காரணம் பற்றி விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...