சிகரட்டுகளுடன் இலங்கை வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கைது | தினகரன்

சிகரட்டுகளுடன் இலங்கை வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கைது

சிகரட்டுகளுடன் இலங்கை வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கைது -Cigarette Worth Rs 35 Lakhs Seized at BIA-3 Chinese Arrested
(வைப்பக படம்)

ரூபா 35 இலட்சம் பெறுமதி

சுமார் ரூபா 35 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவர முயற்சி செய்த மூவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (06) ஹொங்காங்கில் இருந்து வந்த CX 611 எனும் விமானம் மூலம் இலங்கை வந்த, ஒரு பெண் உள்ளிட்ட மூன்று சீன நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் தங்களது பயணப்பொதியில் 318 சிகரெட் கார்ட்டன்களை இவ்வாறு கொண்டு வந்துள்ளதாகவும், அதில் 63,600 சிகரெட் உள்ளடங்கி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக இவ்வாறு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி ரூபா  3,498,000 என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...