சந்தேகத்திற்கிடமான மரணம்; ஈச்சங்குளத்தில் கிணற்றில் சடலம் | தினகரன்

சந்தேகத்திற்கிடமான மரணம்; ஈச்சங்குளத்தில் கிணற்றில் சடலம்

சந்தேகத்திற்கிடமான மரணம்; ஈச்சங்குளத்தில் கிணற்றில் சடலம்-Body Found Vavuniya Eechankulam

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம், கல்மடு பகுதியில் கிணற்றிலிருந்து சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

நேற்று (05) மாலை வீட்டிலிருந்த தனது மகனை   நீண்ட நேரமாக  காணவில்லை என்று அவரது தாயார் தேடியுள்ளார். இதனையடுத்தே கிணற்றில் அவரது சடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடலமாக மீட்கப்பட்டவர் சிதம்பரநாதன் செல்வம் எனும் 40 வயதுடைய நபர் ஆவார்.

பின்னர் தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

குறித்த சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டபோது, அவரது கைகள் நூலால் கட்டப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம், வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கோவில்குளம் குறூப் நிருபர் - கந்தன் குணா)


Add new comment

Or log in with...