பாராளுமன்ற கலைப்பு இடைக்காலத் தடை டிச. 10 வரை நீடிப்பு | தினகரன்

பாராளுமன்ற கலைப்பு இடைக்காலத் தடை டிச. 10 வரை நீடிப்பு

இடைக்கால தடை நீடிப்பு; நாளை விசாரணை தொடரும்-Parliament Dissolving Interim Order Extended Till Dec 10

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை செயல்படுத்துவது தொடர்பான இடைக்கால தடை, எதிர்வரும் திங்கட்கிழமை, டிசம்பர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 04 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் (06) பிரதம நீதியரசர் நலின் பெரேரா மற்றும் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட, புவனேக்க அலுவிஹார, முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த இடைக்கால தடையுத்தரவு ஏற்கனவே இன்று (07) விதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்றதன் காணரமாக நாளை (08) வரை ஒத்திவைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 10 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த நவம்பர் 09 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

அதற்கமைய குறித்த வழக்கு விசாரணை கடந்த நவம்பர் 12 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன்,  குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இம்மாதம் 07 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதிப்பதாக நவம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற விசாரணைகளை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை (03) முதல் நான்கு நாட்களாக இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைவாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றையதினம் (07) குறித்த இடைக்கால தடையை எதிர்வரும் திங்கட்கிழமை வரை (10) நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Add new comment

Or log in with...