தரகு அரசியல் செய்யும் கட்சிகளால் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு ஆபத்து | தினகரன்

தரகு அரசியல் செய்யும் கட்சிகளால் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு ஆபத்து

தமது தரகு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே கூட்டமைப்பில்,தமிழரசுக் கட்சி செயற்படுவதாகவும்,தமிழர்களின் உரிமைகள், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கம் அக்கட்சிக்கு இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் வோனந்தா தெரிவித்தார்.

ஒரு லட்சத்து 10 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்டத்தின் முதற்கட்டமாக டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த 15 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள், தமிழரசுக் கட்சியின் தரகு அரசியலால் மீண்டும் தாமதமாகியுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்:

தமிழ் மக்களை அடகு வைத்து தமது சுயலாப அரசியலுக்காக தரகு அரசியல் செய்யும் தமிழரசுக் கட்சியினர், தமது சுயலாபங்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராகவும், தரகுகள் பாதிக்கப்படுவதற்கு எதிராகவுமே இன்று செயற்படுகின்றனர்.

இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் நாம் ஆரவாரமின்றி சாதிக்க நினைத்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வீடற்று மழையிலும், வெயிலிலும் துன்பப்பபடும் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் எமது முயற்சிகள் காலதாமதமாகியுள்ளன.

நாம் கடந்து வந்த அரசியல்பாதை கல்லும் முள்ளும் நிறைந்த கடும் சவால்மிக்கது. எனினும் தடைகளையும், சவால்களையும் எதிர் கொண்டு எமது மக்களுக்கான சேவை களை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்தும் முயற்சிப்போம்.எமது முயற்சிகளுக்கு வாய்ப்பாக ஒரு விநாடி கிடைத்தாலும் அதை முடியுமானவரை மக்களின் அரசியல் தீர்வு, அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சனைகளுக்காக பயன்படுத்துவோம்.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை யும் எதிர்கொண்டு எமது மக்களின் அரசியல் தீர்வு, அன்றாடப் பிரச்சனைகளுக்கான தீர்வு, அபிவிருத்திகளை நிறைவேற்ற உள்ளோம். இதற்கான கடின உழைப்பும், ஆற்றலும், விருப்பமும் எம்மிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...