ஜனாதிபதியின் கூற்றை ஏற்க முடியாது | தினகரன்

ஜனாதிபதியின் கூற்றை ஏற்க முடியாது

ரணில் விக்கிரமசிங்க எந்த மைத்திரியை திருமணம் செய்தார் என்ற சந்தேகம் ஏற்படுவ தாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எம்.பி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.ரணில் விக்கிரமசிங்கவை மணமுடித்தவர் போன்று ஜனாதிபதி உரையாற்றுவதாக தெரிவித்த அவர், சு.க மாநாட்டிலும் அவர் ,ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்ததாக குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றிய அவர்: டி.பி விஜேதுங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவை பிரதமராக நியமித்தார்.

அப்பொழுது ஐ.தே.கவை விட ஒரு ஆசனம் தான் அவரின் கட்சிக்கு கிடைத்திருந்தது.ச ந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்தபோது கூடுதல் ஆசனம் பெற்ற ரணில் விக்கிரமசிங்வை பிரதமராக நியமித்தார். அவருக்கு ரணில் விக்கிரமசிங்கவை பிடிக்காத போதும் பிரதமர் பதவிக்கு அவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தார். ஆனால் 225 எம்.பிக்கள் கோரினாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...