Thursday, March 28, 2024
Home » புத்தளம் கடுமையான் குள பகுதியில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

புத்தளம் கடுமையான் குள பகுதியில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

by damith
December 11, 2023 5:59 am 0 comment

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய டெங்கு அவதான நிலைமையைக் கருத்திற்கொண்டு புத்தளம் நகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் பொலிஸார் இணைந்து ஸாலிஹீன் பள்ளி மஹல்லா வாசிகளின், கடுமையான்குளம் பகுதிகளில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை (06) மேற்கொண்டனர்.

இதன்போது அதிகாரிகளால் நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளங் காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன் உரியவர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

ஸாலிஹீன் மஹல்லா வாசிகளின் வீடுகள் மிகவும் சுத்தமாக காணப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள், குடம்பிகள் ஒன்றும் காணப்படவில்லை என பரிசோதனைகளில் ஈடுபட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறே சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக்கொண்டனர். இதற்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து மஹல்லா வாசிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

நகரசபை செயலாளர் L.B.G. பிரீத்திகாவின் வழிகாட்டலுடன் நகரசபையின் சுகாதார மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள் தீவிர அர்ப்பணிப்புடன் டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT