Thursday, March 28, 2024
Home » இலங்கைக்கு ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்

இலங்கைக்கு ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முஷாரப் எம்.பி

by damith
December 11, 2023 9:33 am 0 comment

ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது ஜனாதிபதியின் திட்டமாகும் என பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்டம் மண்டபத்தில் (8) இடம்பெற்றது

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து இங்கு உரையாற்றிய அவர், நமது நாட்டில் அரச சேவையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களுக்கான செலவினங்கள் வருடாந்தம் பல மில்லியன் ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. IMF அறிக்கையின் பிரகாரம் அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆலோசனை வழங்கப்படுகிறது. எனினும் ஒவ்வொரு ஆண்டும் இருந்த அரசியல் சூழல்கள், நெருக்கடிகளால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. திடீரென அவர்களை இப்போது தூக்க முடியாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க செய்ய வேண்டும், இதற்காக சுற்றுலா பயணிகளை அதிகளவில் நம் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார்.

2013 ஆம் ஆண்டு 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது ஒரு பெரிய அடைவாகும். 2004ஆம் ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவைப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடைய எண்ணமாகும். அண்மையில் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது, அதில் இலங்கையில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி இலங்கைக்கு இருக்கிறது.

இலங்கையினுடைய சுற்றுலா தளங்கள், காலநிலை, இயற்கை போன்ற அம்சங்கள் இதற்கு வழி வகுக்கின்றன. ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்குள் கொண்டு வருவது ஜனாதிபதியுடைய எண்ணத்தில் உள்ள விடயமாகும். அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்து செல்வதால் இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இதற்கு நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாம் ஒழுங்கமைக்கும்போது சில திணைக்களின் பொறுப்பு அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. அதனால் தீர்மானங்களையும் பொதுமக்களுக்கான சேவைகளையும் வழங்குவதில் நாம் இழுத்தடிப்பு செய்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT