சவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக செனட்டர்கள் கருத்து | தினகரன்


சவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக செனட்டர்கள் கருத்து

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையில் சவூதி முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறி உள்ளார்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த இந்த தெற்கு கரோலினா செனட்டர் சல்மானை அபாயகரமானவர், கிறுக்குத்தனமானவர் என்றும் விபரித்துள்ளார். யெமனுக்கு எதிரான சவூதியின் போரையும், முடிக்குரிய இளவரசர் அதிகாரத்தில் இருக்கும் வரை சவூதிக்கு ஆயுதம் விற்பனை செய்வதையும் ஆதரிக்க முடியாதென கிரஹாம் தெரிவித்துள்ளார்.

கசோக்கியின் கொலை குறித்து மத்தியப் புலனாய்வுத்துறை அதிகாரியின் விளக்கத்தைத் தொடர்ந்தே அமெரிக்க செனட்டர்கள் சவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

முகமது பின் சல்மான் தான் ஜமால் கசோக்கியின் கொலைக்குப் பின்னணியில் இருந்தார் என்பதில் தற்போது எவ்வித சந்தேகமும் இல்லை என்று செனட்டர்கள் தெரிவித்தனர்.

மத்திய புலனாய்வுத் துறைத் தலைவர் ஜினா ஹெஸ்பல் செனட்டர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஜமால் கசோக்கியின் கொலை பற்றி விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...