பிரான்ஸின் நியூ கலடோனியாவில் அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் | தினகரன்


பிரான்ஸின் நியூ கலடோனியாவில் அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள்

பசிபிக் பிராந்தியத்தின் நியூ கலடோனியாவில் நேற்று இரு சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டதோடு இதனைத் தொடந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.

கடலுக்கு அடியில் மிகக்குறைந்த ஆழத்தில் 7.6 என்ற ரிக்டர் அளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டதோடு தொடர்ந்து அங்கு மற்றொரு சக்திவாய்ந்த அதிர்வு நிகழ்ந்தது.

இந்த புதிய பூகம்பம் ஆரம்பத்தில் 7.0 ரிக்டர் அளவாக கூறப்பட்டதோடு பின் 6.6 என அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தால் மாற்றப்பட்டது. இந்த பூகம்பம் காரணமாக மக்கள் விடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர். பிரான்ஸின் ஆட்சியில் உள்ள நியூ கலடோனியாவில் சுமார் 270,000 மக்கள் வசிப்பதோடு இது அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதியில் உள்ளது.

இந்த பூகம்பத்தை அடுத்து அந்த பிராந்தியத்தில் சிறிய அளவான சுனாமி அலை ஏற்பட்டுள்ளது.

இந்த பூகம்பங்களால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதங்கள் பற்றிய விபரம் வெளியாகவில்லை.


Add new comment

Or log in with...