அனைத்து வித போட்டிகளிலிருந்தும் கம்பீர் ஓய்வு | தினகரன்

அனைத்து வித போட்டிகளிலிருந்தும் கம்பீர் ஓய்வு

அனைத்து வித போட்டிகளிலிருந்தும் கம்பீர் ஓய்வு-Gautam Gambhir Retired from All Format of the Cricket

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கெளதம் கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணி 2011 உலகக்கிண்ணத்தை வெல்வதற்கு மிக முக்கிய பங்கினை கம்பீர் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக அவர் 2016 ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ ஒளிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள கெளதம் கம்பீர் அதில் இவ்வாறு தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

37 வயதான கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 4,154 ஓட்டங்களையும் 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 39.68 எனும் ஓட்ட சராசரியின் அடிப்படையில் 5,238 ஓட்டங்களையும் 37 ரீ20 போட்டிகளில் விளையாடி 27.41 எனும் ஓட்ட சராசரியின் அடிப்படையில் 932 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியன் பிரீமீயர் லீக் போட்டிகளில் கொல்கத்தா அணியின் தலைவராக செயற்பட்ட கம்பீர், 2008 முதல் 2010 வரை டெல்லி அணிக்காக விளையாடிய நிலையில் (2010 இல் DD தலைவர்), 2011 முதல் 2017 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளதோடு, 2012 மற்றும் 2014 இல் அவ்வணி சம்பியனாக தெரிவாவதற்கு பெரும் பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு (2018) இடம்பெற்ற IPL தொடரில், கம்பீர் டெல்லி டெயார் டெவில் அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ரஞ்சி கிண்ணத்தொடரில் விளையாடி வரும் கம்பீர் எதிர்வரும் வியாழன் (06) நடைபெறவுள்ள ஆந்திரா அணியுடான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


Add new comment

Or log in with...