கைதிகள் விடுதலை, நஷ்டஈடு வழங்குவதை முன்னர் எதிர்த்தோர் தற்போது ஆதரவு | தினகரன்


கைதிகள் விடுதலை, நஷ்டஈடு வழங்குவதை முன்னர் எதிர்த்தோர் தற்போது ஆதரவு

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் பிரேரணை மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைகளை எதிர்த்தவர்கள் தற்பொழுது அதற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

இதன் மூலம் அவர்களின் சுயநல அரசியல் இலாபம் வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்டஈடு வழங்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இது புலிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை என சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவ்வாறானவர்கள் இன்று முன்னாள் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதாகக் கூறுகின்றனர். இவ்விடயத்தை முன்னர் நாம் கூறும்போது இனவாதத்தைத் தூண்டியிருந் தனர்.இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படுவ துடன், அரசியல் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அன்று எதிர்த்தவர்கள் அரசியல் இலாபத்துக்காக தமது சுயரூபத்தைக் காண்பித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் இருவரின் படுகொலையை முன்வைத்து பிரச்சினைகளை எழுப்புகின்றனர். இவ்வாறாளோர் மாவீரர் தினம் கொண்டாடப்படும்போது வாய் திறக்காமல் இருந்தனர் என்றார்.

அதேநேரம், ஊழல் மோசடிகளை ஒழிக்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறான முடிவொன்றை எடுத்திருந்தால், திறைசேரி முறி மோசடி நடைபெற்றபோதே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். ஒரு வார காலத்தில் ஆணைக்குழுவை அமைத்து குற்றவாளிகளைத் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை எவரும் தண்டிக்கப் படவில்லை.

பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையி ல்லா பிரேரணையை நிறைவேற்றியிருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. அன்றையதினம் அவரைக் காப்பாற்றும் வகையிலேயே சுதந்திரக் கட்சியினர் நடந்து கொண்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...