1000 ரூபா சம்பளம்:வேலைநிறுத்தத்தை மக்கள் போராட்டமாக முன்னெடுக்க தீர்மானம் | தினகரன்


1000 ரூபா சம்பளம்:வேலைநிறுத்தத்தை மக்கள் போராட்டமாக முன்னெடுக்க தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆறு முகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கட்சி, தொழிற்சங்கப் பேதங்களின்றி அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக் கப் போவதாகத் தெரிவித்துள்ள அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பான கடிதமொன்றை தேசிய தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கம் இணைந்த தோட்ட தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களின் பொதுச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு தெரிவித்துள்ளதா கவும் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இணைந்த பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மேற்படி எந்தக் கோரிக்கைகளுக்கும் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை யெனக் குறிப்பிடும் அவர், இது தொழிற்சங்க போராட்டமாகவோ அல்லாது மக்கள் போராட்ட மாகவோ முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

சம்பள உயர்வு தொடர்பான தோட்டத் தொழிலா ளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த நாலாம் திகதி ஆரம்பமானதுடன் நேற்றும் (05) இரத்தினபுரி, அவிஸ்ஸாவளை, மத்துகம தோட்டப் பகுதிகளுக்கும் அது விஸ்தரிக்கப் பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, ஹற்றன், இரத்தினபுரி, காலி ஆகிய பிரதேசங்களிலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றை மக்கள் போராட்டமாக முன்னெடுத்து மக்களின் வெற்றியாக நிறைவு செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று அவர் கேட்டுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...