பாராளுமன்றம் டிச. 12 வரை ஒத்திவைப்பு | தினகரன்


பாராளுமன்றம் டிச. 12 வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் டிச. 12 வரை ஒத்திவைப்பு-Parliament Adjourned Till Dec 12

- ஐ.ம.சு.மு. இன்றி ஒத்திவைப்பு வேளை விவாதம் பி.ப 5.30 வரை

பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமானது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. அதற்கமைய இன்றைய தினம் (05) எடுத்துக்கொள்ளப்படவிருந்த யோசனையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒத்திவைப்பு வேளை விவாதம் ஒன்றை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய,  இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பாராளுமன்ற அமர்விலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்றைய (05) பாராளுமன்ற அமர்வில் பொதுமக்களுக்கான பார்வையாளர் பகுதி மற்றும் சபாநாயகரின் விசேட விருந்தினர் பார்வையாளர் பகுதிகளில் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, ஊடகவியலாளருக்கு மாத்திரம் அவர்களுக்குரிய பார்வையிடும் பகுதியில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...