இந்தியாவின் நீளமான ரயில் பாலம்: 25ஆம் திகதி திறப்புவிழா | தினகரன்


இந்தியாவின் நீளமான ரயில் பாலம்: 25ஆம் திகதி திறப்புவிழா

இந்தியாவின் நீளமான ரயில் - சாலை பாலமான போகிபீல் பாலத்தை பிரதாமர் மோடி டிசம்பர் 25ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார். இப்பாலம் பிரம்மபுத்திரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கிறது.

4.94 கி.மீ. நீளம் கொண்ட போகிபீல் பாலம் அசாமின் கிழக்குப் பகுதி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும். இதில் மேலே மூன்று வழிச் சாலையும் கீழே இரண்டு வழி ரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன.

1997-ல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவில் அடிக்கல் நாட்டப்பட்ட போகிபீல் பாலம், 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடக்கி வைக்கப்பட்டது.

கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு முறை காலக்கெடுக்களைக் கடந்த பாலம், கடந்த டிசம்பர் 3-ம் திகதி முதன்முதலாக ரயில் போக்குவரத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...