இலங்கை அணி நியுசிலாந்து பயணம் | தினகரன்

இலங்கை அணி நியுசிலாந்து பயணம்

சந்திமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி நியுசிலாந்து அணியுடனான கிரிக்கெட் சுற்றுத்தவடருக்காக நேற்றுமுன்தினம் (3) இரவு நியுசிலாந்து நோக்கி பயணமானது.

2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகள் ஜனவரி 3,5 மற்றும் 8 ஆம் திகதிகளிலும் ஒரே ஒரு ரி20 போட்டி ஜனவரி 11ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியுசிலாந்து அணியுடனான தொட ரைத் தொடர்ந்து இலங்கை அணி தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மோதவுள்ள நிலையில் தொடர்ச்சியாக 100 நாட்கள் இலங்கை அணி வெளிநாடுகளில் தங்கியிருக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...