கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் ரக்பி நடுவர்களுக்கு அனுசரணை | தினகரன்

கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் ரக்பி நடுவர்களுக்கு அனுசரணை

கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் பிரைவட் லிமிடட் இலங்கை விளையாட்டுத் துறைக்கு நன்மை பயக்கும் மற்றொரு முயற்சியாக, 2018/19 ரக்பி பருவத்தை நடத்துவதற்காக இம்முறை ரக்பி கால்பந்து நடுவர்களின் இலங்கை சமூகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

கடந்த நவம்பர் 9ஆம் திகதி அரம்பமான டயலொக் ரக்பி லீக்கில் முக்கிய பங்காற்றும் ரக்பி நடுவர் சமூகத்திற்கு 'பெண்குயின்' வர்த்தக நாமத்தின் கீழ் குடைகள் மற்றும் காலுறைகள் உற்பத்தியில் இலங்கையின் முன்னணி நிறுவனமான கந்துரட்ட குழுமத்தின் புதிய கூட்டிணைவை பார்க்க முடியும்.

நாட்டின் விளையாட்டு மேம்பாட்டுக்கு தமது கடப்பாட்டை முன்னெடுப்பதாகவே கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் மூலம் இந்த புதிய கூட்டிணைவுக்கு அனுசரணை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் கந்துரட்ட கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் கண்டி ரக்பியில் திரித்துவ கல்லூரிக்கு பிரதான அனுசரணை வழங்க முன்வந்தது. நிறுவனமாது எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் அணிக்கு பல ஆண்டுகளாக ஆடை அனுசரணை வழங்கியதோடு ஏ.சி.சி. இளையோர் ஆசிய கிண்ணத்தில் பங்கேற்ற 19 வயதுக்கு உட்பட்ட தேசிய கிரிக்கெட் அணிக்கு விசேட கிரிக்கெட் காலுறைகளையும் வழங்கியது. மேலும் சர்வதேச பங்கேற்புடன் இலங்கையின் கால்பந்துக்கான சுயாதீனமான பயிற்சி மையம் ஒன்றான TAFA பயிற்சி அகடமிக்கும் அந்த நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.

கந்துரட்ட கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான குடைகள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் ஏற்கனவே முதலிடத்தை பிடித்திருப்பதோடு அந்த நிறுவனமானது நுளம்பு வலைகள், மழைக் கோட்டுகள் மற்றும் காலுறைகளையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவது மற்றும் தரமான பொருட்களுடன் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய தனது உற்பத்தி எல்லையை விரிவுபடுத்தி மற்றும் பன்முகப்படுத்தியுள்ளது.

1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து கந்துரட்ட குடைகள் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்திருப்பதோடு இலங்கையின் பல முன்னணி வர்த்தக விருது விழாக்களிலும் அதன் சிறப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்றீஸ் பிரைவட் லிமிடட் ஒரு கூட்டு நிறுவன தலைமையாக இருந்து இலங்கையின் விளையாட்டின் முன்னேற்றத்திற்கு ரக்பி சமூகத்துடனான புதிய கூட்டிணைவு நடப்பு பருவம் முழுவதும் இலங்கையில் விளையாட்டை ஊக்குவிக்க உதவும் என்று நம்புகிறது.


Add new comment

Or log in with...