நிலம் பாதிக்கப்படுவது நாட்டின் பெரும் பிரச்சினை | தினகரன்


நிலம் பாதிக்கப்படுவது நாட்டின் பெரும் பிரச்சினை

உலக மண் தினம் டிசம்பர் 5ம் திகதியான இன்று கொண்டாடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினூடாக வருடந்தோறும் இந்த தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினம் 'மண் பாதுகாப்பும் வளமான காணி பாவனையும்' என்னும் தொனிப்பொருளில் பல நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்படுகின்றன.

இம்முறை உலக மண் தின தொனிப்பொருள் 'மண்ட மாசடைவதற்கு தீர்வாக அமைவோம்' என்பதாகும். 2017ம் ஆண்டின் தொனிப்பொருள் 'பூகொளப் பாதுகாப்பை, நிலத்திலிருந்து ஆரம்பிப்போம்' என்பதாகும்.

உலக மண் தினத்திற்காக இலங்கையிலும் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன் முக்கிய நிகழ்வு வெலிமடை தம்புகஸ்ஸாகலவில் இன்று நடைபெறுகிறது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல அமைச்சின் கீழுள்ள விவசாய காணி புனரமைப்புத் திட்டம், விவசாய திணைக்களம் ஊவா மாகாண சபை இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

விவசாய காணி புனரமைப்பு திட்டத்தின் முகாமையாளர் நிமல் குணசேன, நிலம் பாதிப்படைவது இலங்கையில் மிக மோசமான பிரச்சினையாக காணப்படுவதாகக் கூறுகிறார். கணக்கெடுப்பின்படி இலங்கையில் மொத்த நிலப்பரப்பில் 1/3 வீதம் மண் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. மண்ணிப்பு மற்றும் மண்ணின் ஊட்டம் குறைவடைவதும் மத்திய மலைநாட்டின் மண்வளப் பாதிப்புக்கு முக்கிய இரண்டு காரணங்களாகும். மத்திய மலை நாட்டில் விவசாய காணிகளில் 50% தற்போது அழிவுக்கு உள்ளாகியுள்ளது. மண்ணிப்பு தொடர்பான ஆய்வுகளின்படி இலங்கையில் 25 மாவட்டங்களில் மத்திய மலைநாட்டின் கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களே மிக மோசமாக மண்ணரிப்புக்குள்ளான மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக குணசேன கூறுகிறார்.

இத்திட்டத்தின் மூலம் வளமான காணிப் பாவனை தொடர்பான விவசாயிகளையும் மற்றும் பொதுவாக மக்களையும் அறிவுறுத்துவதுடன் வளமான காணிப் பாவனை முறையை பயன்படுத்த ஊக்குவிப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட 'மண் மாசடைதலில் மறைந்திருக்கும் உண்மைகள்' அறிக்கையின்படி மண் மாசடைதல் எனக் கருதுவது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.மண்ணில் இரசாயனப் பதார்த்தங்களோ அல்லது வெளிக்கூறுகள் உள்ளடக்கப்படுதலோ அல்லது குறிப்பிட்ட அடர்த்தியை விட அதிகமாக காணப்படுவதன் காரணமாக உயிர் அங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலைமை, மண் மாசடைதலை நேரடியாக மதிப்பிடவோ அல்லது கண்ணால் காணவும் முடியாது என்பதால் அது மறைந்திருக்கும் ஆபத்தாகும்.

உலகின் மண்வளங்களின் நிலைமை தொடர்பாக அண்மையில் வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி மண் மாசடைதல் உலகின் மண் வளத்திற்கும் அவற்றால் வழங்கப்படுகின்ற சூழல் தொகுதிக்கான சேவைகளைப் பாதிக்கும் முக்கியமான அச்சுறுத்தலாகும். மண் மாசடைதல் தொடர்பாக உலகின் எல்லா பகுதிகளிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

ஐ. நா- சூழல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மண் மாசடைவை தடுத்து முகாமைத்துவம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 170 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

கைத்தொழிற்சாலைகளில் உருவாகும் இரசாயனப் பொருட்கள், வீடுகள், பண்ணைகளில் உருவாகும் கழிவுகள், விவசாய இரசாயன கழிவுகள், எரிபொருள் சார்ந்த கழிவுகள் மண்மாசடைவதற்கு முக்கிய பங்காற்றுகின்றன.

விஞ்ஞான ஆய்வுகளின் பிரகாரம் மண் மாசடைவது நேரடியாக மனிதனின் சுகாதாரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆசனிக், ஈயம், செட்மியம், இரசாயனப் பொருட்கள், பொலிக் லோரினேடட் பைபினயில், பொலிஸயிக்லிக் எரோமடிக் ஹைரோ காபன் போன்றன நேரடியாக மனிதனுக்கு பாதிப்பை தருகின்றன.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு ‘உலக மண்கொள்கையில் திருத்தம் செய்துள்ளது. இந்த பரிந்துரையின் பிரகாரம் மண் மாசடைவதை தடுக்க சட்டத்தை செயற்படுத்தி மண் மாசடைவை தடுக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்களுக்கு உயர்ந்த சுகாதார நிலைமைகளையும் வாழ்க்கை தரத்தையும் வழங்க முடியும். கொள்கைகளினூடாக குறிப்பிட்ட அளவை விட மாசடைந்த மண்ணை திருத்தி உரிய நிலைமைக்கு கொண்டு வந்து மக்களின் சுகாதாரத்தையும் சுற்றாடலையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசாங்கங்களின் பொறுப்பாகும். பூகோள ரீதியில் நிரந்தர மண் முகாமைக்கான முறைமைகளை முன்னெடுத்து விவசாய மூலங்களினூடாக ஏற்படும் மண் மாசடைவை மட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஐ. நாவின் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

* வாயு மண்டலத்தில் தடுத்து வைக்கப்படும் காபனின் அளவை விட மூன்று மடங்கு அதிக காபன் மண்ணில் தடுத்து வைக்கப்படுவது காலநிலை மாற்றங்களுக்கு காரணமாகிறது.

* உலகில் 815 மில்லியன் மக்களுக்கு உணவு பாதுகாப்பு கிடையாது. 2 பில்லியன் மக்கள் போசாக்கு ரீதியில் பாதுகாப்பான நிலையில் இல்லை. ஆனால் மண்ணினூடாக உணவு உற்பத்தியை அதிகரித்து இந்த நிலைமைக்கு தீர்வு காண முடியும்.

* நாம் பயன்படுத்தும் உணவில் 95 வீதமானவை மண்ணின் மூலமே கிடைக்கின்றன.

* உலக மண் வளத்தில் 33 வீதமான பகுதி நாசமடைந்துள்ளது.

(உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் தகவல்களின் பிரகாரம் எழுதப்பட்டது)


Add new comment

Or log in with...