விமான சேவை முறைகேடு; ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு | தினகரன்


விமான சேவை முறைகேடு; ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

விமான சேவை முறைகேடு; ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு-Sri Lankan Mihin Lanka Scam President Commission

ஸ்ரீலங்கன் விமான சேவை, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம்  மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்வாறு அதன் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ கால எல்லை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த நிலையில், அதன் கால எல்லை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ கால எல்லை, கடந்த ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அதன் கால எல்லை ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து, 2018 ஜனவரி 31ஆம் திகதி வரையான காலப் பகுதியில் குறித்த நிறுவனங்களில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஆராயும் பொருட்டே குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீலங்கன், மிஹின் மோசடி விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது.

தலைவர்
- அனில் குணரத்ன
(ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி)
உறுப்பினர்கள்
- ஈ.ஏ.ஜி.ஆர். அமரசேகர
(ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிபதி)
- பியசேன ரணசிங்க
(ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி)
- எம்.டி.ஏ. ஹெரால்ட்
(ஓய்வு பெற்ற பிரதி கணக்காய்வாளர்)
- திருமதி டப்ளியூ.ஜே.கே. கீகனகே
(இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு தர கண்காணிப்பு சபை பணிப்பாளர் நாயகம்)


Add new comment

Or log in with...