5 நிமிட அமர்வின் பின் பாராளுமன்றம் நவம்பர் 23 வரை ஒத்திவைப்பு | தினகரன்

5 நிமிட அமர்வின் பின் பாராளுமன்றம் நவம்பர் 23 வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் நவம்பர் 23 வரை ஒத்திவைப்பு-Parliament adjournedt tillNovember 23rd

இன்று (19) பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்த பாராளுமன்றம், சுமார் 5 நிமிட சபை அமர்வின் பின் எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (19) பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி தலைமையில் ஆரம்பமான பாராளுமன்றம், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.

சுமார் 5 நிமிடங்கள் வரை இடம்பெற்ற சபை அமர்வை அடுத்து, பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஒரு சிலரால் கூச்சலிட்டமை உள்ளிட்ட விடயங்கள் காரணமாக, இன்றைய அமர்வில் பொதுமக்களுக்கும் விருந்தினர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதோடு, ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் பார்வையாளர் பகுதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...