உருளைக்கிழங்கு, வெங்காய விசேட வரி குறைப்பு | தினகரன்


உருளைக்கிழங்கு, வெங்காய விசேட வரி குறைப்பு

உருளைக்கிழங்கு, வெங்காய விசேட வரி குறைப்பு-Potatoe-B Onion Special Commodity Levy Reduced as Rs 20 Per Kg

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான, விசேட விற்பனை பொருள் வரி ரூபா 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று (03) முதல் அமுலாகும் வகையில் குறித்த வரி குறைப்பு அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை கிலோ ஒன்றுக்கு ரூபா 40 ஆக அறவிடப்பட்டு வந்த குறித்த வரி, இன்று முதல் தற்போது ரூபா 20 ஆக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாட்களில் வரும் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...