ஶ்ரீ லங்கன், மிஹின் மோசடி விசாரணை ஆரம்பம் | தினகரன்


ஶ்ரீ லங்கன், மிஹின் மோசடி விசாரணை ஆரம்பம்

ஶ்ரீலங்கன், மிஹின் மோசடி விசாரணை ஆரம்பம்-srilankan-airline-mihin-lanka-scam inquiry commence

 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் லங்கா, மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனங்களில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று (04) ஆரம்பமானது.

கடந்த 2006 ஜனவரி 01 - 2018 ஜனவரி 31 வரையான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்திற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில், நிறுவன பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அதன் மற்றுமொரு அதிகாரியிடம் முதலாவது சாட்சி விசாரணை முன்னெடுக்கப்படும் என, அவ்வாணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...