பெயார்வே தேசிய இலக்கிய விருதுகள் - 2018 | தினகரன்

பெயார்வே தேசிய இலக்கிய விருதுகள் - 2018

பெயார்வே தேசிய இலக்கிய விருதுகள் - 2018-Fairway Literary awards 2018

டிசம்பர் 03 கொழும்பில்

பெயார்வே தேசிய இலக்கிய விருதுகள் (FNLA) 2018 கொழும்பில் டிசம்பர் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு பெயார்வே ஹோல்டின்ஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி குழும நிறுவனங்களில் ஒன்றான பெயார்வே நிறுவனத்தினால் தொடர்ச்சியாக நான்காவது வருடமாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்வு, நாட்டின் ஆக்கபூர்வமான எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மூன்று மொழிகளிலும் நடத்தப்படுகின்றது.

பெயார்வே காலி இலக்கிய விழா 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வானது, பின்னர், மிகப் பெரிய சர்வதேச இலக்கிய நிகழ்வாக நாட்டில் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. தற்போது FNLAஇ இலங்கையின் மிகச் சிறந்த ஆக்கபூர்வமான எழுத்தாளர்களின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது. உள்நாட்டின் திறமைவாய்ந்த எழுத்;தாளர்களுக்கு வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து, மறைந்துள்ள அவர்களின் திறமைகளை கௌரவித்து, தேசிய ரீதியில் அவர்களுக்கு மதிப்பளிப்பதே FNLA நிகழ்வின் பிரதான நோக்கமாகும். நாட்டின் கலை மற்றும் கலாசார நிகழ்வுகளை மேம்படுத்தும் வகையிலும், புதிய எழுத்தாளர்களை உருவாக்கும் நோக்குடனும் பெயார்வே ஹோல்டின்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் பிரதான ஈடுபாடு இதன் மூலம் நன்கு வெளிப்படுகின்றது. பெயார்வே தேசிய இலக்கிய விருதுகளின் போது, எழுத்தாளர்களுக்கும், பிரசுரிப்பாளர்களுக்கும் பெறுமதிமிக்க பணப் பரிசுகளும், அதியுயர் கௌரவமும் வழங்கப்பட இருக்கிறன. இலங்கையின் இலக்கிய நாட்காட்டியில் இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கிய அம்சமாகும்.

கடந்த மூன்று வருடங்களின் வெற்றியாளர்கள்
2017 - பண்டக புத்ர வஸ்துவ - அனுரசிறி ஹெட்டிகே, ஈதானம், தேனியன் மற்றும் The Other One அமந்தா ஜே.
2016 - டெனிசன் பெரேராவின் மகா ராவண, எம்.சிவலிங்கத்தின் பஞ்சம் பிளைக்க வந்த சீமை, மற்றும் தீனா குமரகுருநாதனின் First Utterance.
2015 - சேபாலி மாயாதுன்னேயின் மகா சாமி, ஆயத்துறை சாந்தனின் சுயடைள Rails run Parallel மற்றும் றிஸ்வினா மோர்சத் டி அல்விஸின் It’s Not in the Stars.

இவ்வருட போட்டிக்கான விண்ணப்பங்கள் 2018 ஜுன் மாதத்தில் கோரப்பட்டிருந்தன. இதற்காக 120 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் சிங்களம் - 5, தமிழ் - 5, ஆங்கிலம் 4 புத்தகங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி அவற்றின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இவ்வருட FNLA தெரிவுகள்

சிங்களம்:
சேபாலி மாயாதுன்னவின் அத்தனி கணு, பத்மினி செனெவிரத்னவின் வரண, அருண பிரேமரத்னவின் தரு விசுல றய, தரங்கனி ரெசிகா பெர்னாண்டோவின் தேசதுரோகியாகே நிர்மல ஹர்தய மற்றும் பி.பீ.ஜயசேகரவின் பலவ கந்துலு கினிகனி! என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்:
பிரமிலா பிரதீபனின் கட்டுப்பொல், பெர்னாண்டோ சீமன் பத்திநாதனின் தோற்றுப் போனவர்கள், முஸ்தீனின் இரட்டைக் குளியல், நவயானி யோகேந்திரநாதனின் இடிபடும் கோட்டைகள் மற்றும் ஏ.எம்.எஸ்.வேலாழகனின் பனிச்சையடி முன்மாரியம் சட்டக்கிணறும்.

ஆங்கிலம்:
சந்தலி ஹந்தகமவின் சுRao’s Guide to Lime Pickling, செஹெனி ஹிசாரா காரியவசனின் The Chameleon, சாருலதா அபேசேகர தேவரதந்திரியின் Stories மற்றும் நவீன் வீரரத்னவின் Zeelam என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக பேராசிரியா ஜே.வி. திசாநாயக்க கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...