எரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல் | தினகரன்

எரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்

எரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்-Fuel Price Reduced br Rs 5

எரிபொருட்களின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் ஒக்டேன் 92, 95, ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு (16) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருவதாக, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர், காமினி லொக்குகே இதனை அறிவித்துள்ளார்.

இன்று (15) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷ, நிதியமைச்சைப் பொறுப்பேற்றதை அடுத்து, கடந்த நவம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலை இவ்வாறு அதிரடியாகக் குறைக்கப்பட்டது.

இன்று காலை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்ட விசேட உரையின்போது, எரிபொருட்களின் விலைகளை குறைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய

CPC - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 145 இலிருந்து ரூபா 140 ஆக ரூபா 5 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 169 இலிருந்து ரூபா 164 ஆக ரூபா 5 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 116 இலிருந்து ரூபா 111 ஆக ரூபா 5 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 141 இலிருந்து ரூபா 136 ஆக ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது. (4.03pm)

IOC பெற்றோல், டீசல் விலை குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல் (UPDATE)

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு (16) முதல் அமுலாகும் வகையில் 

பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 2 இனாலும், டீசலின் விலை ரூபா 11 இனாலும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய

IOC - இந்தியன் ஒயில் நிறுவனம்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 153 இலிருந்து ரூபா 148 ஆக ரூபா 5 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 172 இலிருந்து ரூபா 167 ஆக ரூபா 5 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 118 இலிருந்து ரூபா 111 ஆக ரூபா 7 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 141 இலிருந்து ரூபா 136 ஆக ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...