Saturday, April 20, 2024
Home » நாட்டின் வருடாந்த பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி

நாட்டின் வருடாந்த பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி

- சுட்டிக்காட்டும் புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கை

by gayan
December 9, 2023 12:38 pm 0 comment

நாட்டில் பிறப்பு வீதம் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை மேற்கொண்ட கண்காணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், பிறப்பு, மரணம் மற்றும் திருமணம் தொடர்பான அதன் தரவு அறிக்கைக்கு இணங்க வருடாந்தம் பிறப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரதி வருடமும் பதிவு செய்யப்பட்டுள்ள குழந்தை பிறப்பு படிப்படியாக குறைவடைந்து வந்துள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இந்த வருடத்தின் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் 2,68,920 குழந்தை பிறப்பு பதிவாகியுள்ளது. இது குறிப்பிடத்தக்க அளவு குறைவான எண்ணிக்கையாகும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு குழந்தை பிறப்பு எண்ணிக்கை 275, 321 ஆகவும் 2021ஆம் ஆண்டு குழந்தை பிறப்பு 2, 84, 848 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் அதேவேளை 2020ஆம் ஆண்டு இந்த குழந்தை பிறப்பு 3 இலட்சத்துக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT