இன்றைய சபை அமர்வுகளிலும் பங்கேற்கப்போவதில்லை | தினகரன்

இன்றைய சபை அமர்வுகளிலும் பங்கேற்கப்போவதில்லை

ஆளும் கட்சி இன்றைய (30) தினமும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.

அதேவேளை அரசியலமைப்பு நிலையியற் கட்டளை, பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி மேற்கொள்ளப்படும் பாராளுமன்ற, நடவ டிக்கைகளை ஆளும் கட்சி நிராகரிப்பதாககவும் சபை அமர்வுகள் முறையாக நடத்தப்படும் வரை பாராளுமன்ற அமர்வுகளை ஆளும் கட்சி நிராகரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றக் கட்டடத்தில் நேற்று (29) இடம் பெற்ற ஆளும் கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் தினேஷ்குணர்தன, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். இம் மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வீரவன்ச:

எதிர்க் கட்சியானது மக்கள் வளங்களைத் துஷ்பிரயோகம் செய்து இழந்த அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொள்ள பகீரத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.அதற்கிணங்கவே சபாநாயகர் செயற்படுகிறார். ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க,சுமந்திரன் ஆகியோரது ஊன்றுகோலாகவே சபாநாயகர் செயற்பட்டு வருகிறார்.செங்கோலை மட்டும் வைத்துக்கொண்டு சாபாநாயகர் ஆடும் நாடகம் பாராளுமன்ற அமர்வாக முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 

 


Add new comment

Or log in with...