புதிய ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 நாணயக் குற்றிகள் வெளியீடு | தினகரன்

புதிய ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 நாணயக் குற்றிகள் வெளியீடு

புதிய ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 நாணயக் குற்றிகள் வெளியீடு-A Commemorative coin to mark the 75th Anniversary of SL Signal corps_27.11.2018

இலங்கை மத்திய வங்கி புதிதாக புதிய ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 ஆகிய நான்கு நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நேற்று (27) நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் புதிய நாணயக்குற்றிகளை கையளித்து வெளியிட்டு வைப்பதைப் படத்தில் காணலாம். இந்நிகழ்வு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நாணயக்குற்றிகள் எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் புழக்கத்திறகு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சமிக்ஞை படையணியின் 75 வருட சேவையை முன்னிட்டு, அதனை பாராட்டும் வகையில், அதன் 75 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் குறித்த நாணயக் குற்றிகளை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

புதிய ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 நாணயக் குற்றிகள் வெளியீடு-A Commemorative coin to mark the 75th Anniversary of SL Signal corps_27.11.2018

புதிய ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 நாணயக் குற்றிகள் வெளியீடு-A Commemorative coin to mark the 75th Anniversary of SL Signal corps_27.11.2018

Add new comment

Or log in with...