Saturday, April 20, 2024
Home » டெல்மார் மத்திய பிரிவில் வள்ளுவர் திறன் வகுப்பறை திறப்பு விழா

டெல்மார் மத்திய பிரிவில் வள்ளுவர் திறன் வகுப்பறை திறப்பு விழா

by gayan
December 9, 2023 6:00 am 0 comment

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்திலே இராகலை நகரில் டெல்மார் பிரதேசம் அமையப் பெற்றுள்ளது. கல்வியில் காணப்பட்ட பின்னடைவு நிலையை நிவர்த்தி செய்யும் முகமாக இங்கு கல்வி கற்று பல்கலைக்கழகம் மற்றும் கல்வியில் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவ மாணவிகளால் சேர்ந்து உருவாக்கப்பட்ட அமைப்பே வள்ளுவர் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆகும்.

வள்ளுவர் கல்வி அபிவிருத்தி மன்றமானது கடந்த 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல செயற்பாடுகளில் ஒன்றாக டெல்மார் பிரதேசத்திற்கான திறன் வகுப்பறை உருவாக்கம் காணப்படுகின்றது.

திறன் வகுப்பறையானது மாணவர்களுக்கு இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமானதொன்றாகக் காணப்படுகிறது. இது மாணவர்களின் இணையவழி கற்றல் நடவடிக்கைகளுக்கும் மாணவர்களின் தேடல்களுக்கும் மிக பயனுடையதாக காணப்படும் என்ற நோக்கத்தோடு வள்ளுவர் திறன் வகுப்பறை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு வலப்பனை கல்வி வலய கோட்டக் கல்வி பணிப்பாளர் யோகராஜா விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

இவர் தமது பிரதம உரையில் “இந்த திறன் வகுப்பறையானது எமது பிரதேசத்திற்கு கிடைத்த பெரும் உதவியாகும். இந்த வகுப்பறையைப் பாவித்து எமது மாணவர்கள் கல்வியில் மேம்படவும் இதற்கு உதவி செய்த Ratnam Foundation, Vision Global Empowerment, Mr W. Harichandran ( USA ஆகியோருக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் நந்தகுமார் மற்றும் தோட்ட பொதுமக்களும், மன்றத்தின் ஏனைய உறுப்பினர்களும், ஏனைய தன்னார்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT