Thursday, March 28, 2024
Home » தெனிப்பிட்டியவில் விபத்து; ஒருவர் பலி, ஒருவர் காயம்

தெனிப்பிட்டியவில் விபத்து; ஒருவர் பலி, ஒருவர் காயம்

by sachintha
December 7, 2023 12:45 pm 0 comment

வெலிகம, தெனிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் நேற்று (06) தெரிவித்தனர். வெலிகம கோட்டகொடையைச் சேர்ந்த இர்தான் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார். முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சமயம் பஸ் வண்டியில் மோதுண்டு இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வெலிகம தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT