தேர்தலை நடாத்த கோரி திருமலையில் போராட்டம் | தினகரன்

தேர்தலை நடாத்த கோரி திருமலையில் போராட்டம்

தேர்தலை நடாத்த கோரி திருமலையில் போராட்டம்-Go for the Election-Protest at Trincomalee

மக்கள் குரலுக்கு செவிமடுத்து பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி இன்று (25) காலை திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

திருகோணமலை என்.சீ. வீதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் பேரணி நடை பவனியாக சென்று திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்தது.

தேர்தலை நடாத்த கோரி திருமலையில் போராட்டம்-Go for the Election-Protest at Trincomalee

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுண கட்சி ஆதரவாளர்களும்  கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்ததை போன்று மிக விரைவில் பாராளுமன்ற தேர்தலை நடாத்த வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் 250 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலை நடாத்த கோரி திருமலையில் போராட்டம்-Go for the Election-Protest at Trincomalee

இதேவேளை இவ்வார்ப்பாட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே  மற்றும் கிழக்கு மாகாண முன்னால் அமைச்சர் ஆரியவதி காலப்பதி, மற்றும் குச்சவெளி பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ. எஸ். எம். சாஜித் மற்றும் மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் ஆதரவாளர்கள் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
 


Add new comment

Or log in with...