விபத்து; பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவி, மகன் பலி | தினகரன்


விபத்து; பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவி, மகன் பலி

விபத்து; பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவி, மகன் பலி-Bandaragama Accident-Police Constable-Wife And Son Killed

- புற்றுநோய் சிகிச்சைக்காக சென்ற வேளையில் பரிதாபம்
- ஜீப் வண்டி சாரதி கைது

ஜீப் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகி உள்ளனர்.

பண்டாரகம - கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பிரதேசத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (23) பிற்பகல் 2.35 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் (47), அதில் பயணம் செய்த அவரது மனைவி (40), அவர்களது மகன் (15) ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.

விபத்து; பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவி, மகன் பலி-Bandaragama Accident-Police Constable-Wife And Son Killed

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று மீண்டும் கரன்தெனிய நோக்கி பயணித்த வேளையில் பண்டாரகம திசையிலிருந்து கெஸ்பேவ திசை நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்றும் அதற்கு எதிர்த் திசையில் பயணித்த குறித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்து; பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவி, மகன் பலி-Bandaragama Accident-Police Constable-Wife And Son Killed

இவ்விபத்தில் காயமடைந்த பரிசு கான்ஸ்டபிளும் அவரது மனைவியும் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், அவர்களது மகன் பாணந்துறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஜீப் வண்டி அதற்கு முன்னால் பயணித்த வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், இவ்விபத்து ஏற்பட்டுள்ளதோடு, இதன்போது தொலைபேசி கணு ஒன்றில் மோதிய ஜீப் வண்டி அதற்கு அருகிலிருந்த வளைவில் புரண்டுள்ளது.

ஜீப் வண்டி சாரதியின் அசமந்தமான வாகன செலுத்துகை காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் வண்டியின் சாரதி காயமடைந்துள்ளதோடு,  பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து; பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவி, மகன் பலி-Bandaragama Accident-Police Constable-Wife And Son Killed

குறித்த மூவரும் கரன்தெனிய, கலகாவெல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், மரணமடைந்த குறித்த கான்ஸ்டபிள், தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹதெக்ம பொலிஸ் காவலரணில் பணியாற்றிவருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர்களின் சடலங்கள் பண்டாரகம மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளின் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 


Add new comment

Or log in with...