Thursday, April 25, 2024
Home » 2024 இல் முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள Icon of the Seas

2024 இல் முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள Icon of the Seas

by Prashahini
December 8, 2023 2:27 pm 0 comment

டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரியதும் உலகின் மிகப்பெரியதுமான பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்தை அடுத்த வருடம் 2024 ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

Icon of the Seas என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் Royal Caribbean International நிறுவனத்தினால் இயக்கப்படவுள்ளது. டைட்டானிக் கப்பலானது “dream of the seas” என கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் உலகின் மிகப்பெரிய நீர் பூங்கா, 9 நீர்ச்சுழல்கள், 7 குளங்கள் மற்றும் உணவு மற்றும் பொழுதுபோக்கிற்காக நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

5,610 விருந்தினர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய வசதிகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான பின்லாந்தின் டர்குவில் உள்ள மேயர் டர்கு கப்பல் கட்டும் தளத்தில் இந்தக் கப்பல் கட்டப்பட்டது. இந்தக் கப்பல் அக்டோபரில் முழுமையாக ஏவப்பட்டு 2024 ஜனவரியில் தனது முதல் பயணத்தை மேற்கொள்ளும்.

இந்த கப்பல் ராயல் கரீபியன் பயண நெட்வொர்க்கில் சேர்க்கப்படும் என்று ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் தலைவரும் தலைமை நிர்வாகியுமான மைக்கேல் பெய்லி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ஜூன் 22ஆம் திகதிக்குள் முதல் கட்ட நீர் சோதனை முடிந்துவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

இன்ஜின், ஹல், பிரேக் சிஸ்டம் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றின் திறன் பல மைல்கள் பயணம் செய்து சரிபார்க்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட சோதனைகளும் 2023 இறுதிக்குள் நிறைவடையும். அதன்பிறகு 2024 ஜனவரியில் முதல் பயணத்தை தொடங்கும் என அறிவிப்பட்டுள்ளது.

‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ – உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என்ற முத்திரையைக் கொண்டிருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT