கொழும்பில் சனிக்கிழமை 18 மணி நேர நீர் வெட்டு | தினகரன்

கொழும்பில் சனிக்கிழமை 18 மணி நேர நீர் வெட்டு

கொழும்பில் சனிக்கிழமை 18 மணி நேர நீர் வெட்டு-18 Hour Water Cut in Colombo on Nov 24

கொழும்பில் எதிர்வரும் சனிக்கிழமை (24) 18 மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய திருத்த பணி காரணமாக, எதிர்வரும் சனிக்கிழமை (24) முற்பகல் 8.00 மணி முதல் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிமை (25)  அதிகாலை 2.00 மணி வரையான 18 மணி நேரத்திற்கு குறித்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு, தெஹிவளை - கல்கிசை, கோட்டை, கடுவல மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும்,

மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களிலும்,

கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும்

இரத்மலானை, சொய்சாபுர ஆகிய பிரதேசங்களிலும் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என சபை மேலும் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...