Saturday, April 20, 2024
Home » மத்ரஸா மாணவனின் மரண விசாரணை அறிக்கை வெளியீடு

மத்ரஸா மாணவனின் மரண விசாரணை அறிக்கை வெளியீடு

- கழுத்தில் ஏற்பட்ட அமுக்கம் காரணமாக ஏற்பட்ட மரணம்

by Prashahini
December 8, 2023 9:44 am 0 comment

– ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க சடலம் காத்தான்குடியில் நல்லடக்கம்

கடந்த 5ஆம் திகதி சாய்ந்தமருது மத்ரஸாவில் மீட்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது மாணவனின் சடலம் மீதான மரண விசாரணை நேற்று (07) மாலை அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கழுத்தில் ஏற்பட்ட அமுக்கம் காரணமாக ஏற்பட்ட மரணம் என வைத்தியசாலையின் மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மாணவனின் சடலம் நேற்றிரவு அவரது சொந்த ஊரான காத்தான்குடிக்கு எடுத்து வரப்பட்டு காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நேற்றிரவு தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இம்மாணவனின் மரணம் தொடர்பாக குறித்த மத்ரஸா வின் பொறுப்பாளரான மௌலவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது சாய்ந்தமருது ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் உட்பட பள்ளிவாயல் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான் – மட்டக்களப்பு குறூப் நிருபர்

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு; குர்ஆன் மத்ரஸா நிர்வாகி கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT