1st Test: PAKvNZ; போராடி வென்றது நியூசிலாந்து | தினகரன்

1st Test: PAKvNZ; போராடி வென்றது நியூசிலாந்து

1st Test: PAKvNZ; போராடி வென்றது நியூசிலாந்து-1st Test: PAKvNZ; NZ Won by 4 Runs

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் 176 எனும் இலகு வெற்றி இலக்கை நோக்கி துடுபரபெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுத்தழுவியது. பந்து   வீச்சாளரகளின் ஆதிக்கமாக இருந்த இப்போட்டி மிக விறுவிறுப்பாக நடந்து நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பான ஆரம்பத்தை பாகிஸ்தான் அணி பெற்ற போதிலும் அஜாஸ் பட்டேலின் சிறப்பான பந்து வீச்சுக்காரணமாக முக்கியமான தருணங்களில் விக்கெட்டுக்களை இழக்க ஆரம்பித்தது. 164 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த வேளை அப்பாஸுடன் இணைந்த அஸ்ஹர் அலி மிக மிக நிதானமாக ஓட்டங்களைக் குவிக்க ஆரம்பித்தார். மிக விறுவிறுப்பாக கட்டத்தை எட்டியிருந்த நிலையில் 171 ஓட்டங்களை குவித்த வேளை அஜாஸ் பட்டேலின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக அஸ்ஹர் அலி இறுதி வரை போராடியிருந்த போதிலும் போட்டியின் 4 ஆம் நாளான இன்று பாகிஸ்தான் அணியின் இறுதி விக்கெட்டாக அவர் வீழ நியூசிலாந்து வெற்றியை சுவைத்தது. பாகிஸ்தான் சார்பாக அஸ்ஹர் அலி 65 ஓட்டங்களையும் அசாட் சபீக் 45 ஓட்டங்களையும் பெற்றதோடு இமாமுல் ஹக் 27 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் யாவரும் 20 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் மிக சிறப்பாக பந்து வீசிய அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தார்.

இவர் தவிர இஷ் ஷோதி மற்றும் வேக்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டது. நியூசிலாந்து சார்பில் கேன் வில்லியம்சன் மாத்திரம் 68 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஏனைய வீரர்கள் யாவரும் 20 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் சார்பாக யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும் அப்பாஸ்,ஹஸ்ட்லர் அலி மற்றும் ஹாரிஸ் சொஹைல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 227 ஓட்டங்களைப் பெற்றது. பாபர் அசாம் 62 ஓட்டங்களையும் அசாட் சபீக் 43 ஓட்டங்களையும் ஹாரிஸ் சொஹைல் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் மற்றும் கொலின் டி க்ரண்ட்ஹோம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது 2 ஆவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 249 ஓட்டங்களைப் பெற்றது. வொட்லிங் 59 ஓட்டங்களையும் ஹென்றி நிக்கொல்ஸ் 55 ஓட்டங்களையும் ஜீட் ராவல் 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா தலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஜாஸ் பட்டேல் தெரிவு செய்யப்பட்டார்.

1ஆவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து 153/10 (66.3)
கேன் வில்லியம்சன் 63 (112


யாசிர் ஷா 3/54 (16.3)
அப்பாஸ் 2/13 (12)
ஹசன் அலி 2/38 (16)
பிலால் ஆசிப் 1/33 (13)
ஹாரிஸ் சொஹைல் 2/11 (8)

பாகிஸ்தான் 227/10 (83.2)
பாபர் அசாம் 62 (109)
அசாட் சபீக் 43 (93)
ஹாரிஸ் சொஹைல் 38 (76)

ட்ரென்ட் போல்ட் - 4/54(18.2)
க்ரேன்ட் ஹோம் - 2/30(13)
அஜாஸ் பட்டேல் - 2/64(24)
வேக்னர் 1/30(18)
இஷ் ஷோதி 1/41(10)

2 ஆவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து 249/10 (100.4)
வட்லிங் 59 (145)
ஹென்றி நிக்கொல்ஸ் 55 (171)
ஜீட் ராவல் 46 (120)

ஹசன் அலி 5/45 (17.4)
யாசிர் ஷா 5/110 (37)

பாகிஸ்தான் 171/10 (58.4)
அஸ்ஹர் அலி 65 (136)
அசாட் சபீக் 45 (81)
அஜாஸ் பட்டேல் 5/59 (23.4)
இஷ் ஷோதி 2/37 (12)
வேக்னர் 2/27 (13)


Add new comment

Or log in with...