ஆளுநர் வெற்றிக் கிண்ண கடற்கரை கரப்பந்து | தினகரன்

ஆளுநர் வெற்றிக் கிண்ண கடற்கரை கரப்பந்து

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ் மாகாணத்தில் கடற்கரை கரப்பந்தாட்ட விளையாட்டினை பரவலாக்கும் செயற்றிட்டத்திற்கமைவாக மாகாண சுற்றுலா பயணிகள் அதிகாரசபையின் அனுசரணையுடன், விளையாட்டுத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 'கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக் கிண்ணம் -2018' நிகழ்வு இம்மாதம் 29,30ஆந் திகதிகளில் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினையும், விளையாட்டுத் துறையினையும் மேம்படுத்தும் பொருட்டு குறித்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மாகாணத்திலுள்ள விளையாட்டுக்கழகங்கள் கலந்துகொள்வதுடன், சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டவர்களும் கலந்துகொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படட்டுள்ளதாக விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.

போட்டிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு அதுதொடார்பிலான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் களவிஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். அதன் நிமித்தம் அம்பாறை மாவட்ட போட்டிகள் அட்டாளைச்சேனை கடற்கரையில் நடைபெறவுள்ளது. அதற்கான நடவடிக்கைமேற்கொள்ளும் பொருட்டு மைதான நிலவரங்களை ஆராய்வதனை காணமுடிகின்றது.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட போட்டிகள் கல்லடி கடற்கரையிலும், திருகோணமலை மாவட்ட போட்டிகள் திருகோணமலையிலும் இடம்பெறுவதுடன், இறுதிப் போட்டிகள் திருகோணமலையில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை கடற்கரை மைதான கள ஆய்வில் மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜூதீன்,விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...