பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம் | தினகரன்

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்து; ஒருவர் படுகாயம்

யாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் கந்தர்மட பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் மோதியுள்ளது. இதில் விபத்துக்குள்ளான கார் கந்தர் மடம் அரசடி வீதிவரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மதியம் 1.45க்கு இடம்பெற்ற இவ் விபத்தில் காரை செலுத்திய யாழிலுள்ள பிரபல வர்த்தகரான பாலா என்பவரே படுகாயமடைந்தவராவார்.

விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

புங்குடுதீவு குறூப்,யாழ்.விசேட, யாழ்ப்பாணம் குறூப் நிருபர்கள்


Add new comment

Or log in with...