பாராளுமன்ற தாக்குதல் சேதங்கள்: மதிப்பீட்டு நடவடிக்ைக ஆரம்பம் | தினகரன்

பாராளுமன்ற தாக்குதல் சேதங்கள்: மதிப்பீட்டு நடவடிக்ைக ஆரம்பம்

பாராளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையின்போது சபையின் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்ட விசாரணையின்போது சில மைக்ரோபோன் மற்றும் ஆசனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க மைக்ரோ போனை விநியோகிக்கும் நிறுவனங்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து சேத விபரங்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் சேதமடைந்த உபகரணங்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் திருத்துவதற்கு பாராளுமன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாராளுமன்றம் சுமார் 08 பில்லியன் ரூபாவுக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க இடம்பெற்றுள்ள சேதங்கள் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக காப்புறுதி பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று வருகை தரவுள்ளனர்.


Add new comment

Or log in with...