மருந்து வகைகள் போதுமானளவு கையிருப்பில் | தினகரன்

மருந்து வகைகள் போதுமானளவு கையிருப்பில்

தேவையேற்பட்டால் உள்நாட்டில் கொள்வனவு செய்ய அரசு அனுமதி

நோயாளிகளுக்கு தேவை யான மருந்து போதுமானளவு கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் புத்திக்க குருகுலசூரிய நேற்று தெரிவித்தார்.

மருந்து பற்றாக்குறை உருவாகும் பட்சத்தில் அவற்றை உள்நாட்டில் கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சின் செயலாளர் வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும் சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் தற்போதைக்கு மருந்து தட்டுப்பாடு இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தைக் காரணம் காட்டி அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் புற்று நோயாளர்கள் உள்ளிட்ட அனைத்து நோயாளிகளும் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வதந்திகளை பரப்பி வருவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது மருந்துக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிகள் சுமுகமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. எந்தவொரு நோயாளியும் மருந்து இல்லாமல் திருப்பி அனுப்பப்படவில்லை. போதியளவு மருந்து தற்போது கையிருப்பில் உள்ளது. மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் உடனடியாக உள்நாட்டில் மருந்து கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சின் செயலாளர் எமக்கு வழங்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...