சர்வதேச பொருளாதார தடையோ பயணத் தடையோ இல்லை | தினகரன்

சர்வதேச பொருளாதார தடையோ பயணத் தடையோ இல்லை

* வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவிப்பு
* எதிர்த்தரப்பு குற்றச்சாட்டு நிராகரிப்பு

சர்வதேசத்தினால் இலங்கைக்கு எதிராக எந்த விதத்திலும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தடையை விதிக்கப்போவதில்லை என வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை எதுவும் விதிக்கப்படாது என்றும் அது தொடர்பில் சர்வதேச ரீதியில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இடம்பெறவில்லையெனவும் வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கடந்த சில தினங்களுக்கு முன் நிலவிய அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான வெளிநாட்டு பிரயாணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக எதிர்த் தரப்பினரால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் வினவியபோதே மேற்படி வட்டாரங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளன. ஒரு நாட்டுக்கு எதிராக தடைகள் விதிக்க வேண்டுமானால், அந்த நாடு பாரிய குற்றங்கள் தொடர்பாக சட்டங்களை மீறி செயற்பட்டிருக்க வேண்டும். அதே நேரம், அதனை மீறியதற்கான போதியளவு ஆதாரங்களும் இருக்க வேண்டும் .

எவ்வாறாயினும், எதிர்த் தரப்பினரால் இலங்கைக்கு எதிரான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தடை விதிக்கப்பட்டு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் தடை விதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது. அதேபோன்று ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ எதிராக வெளிநாட்டு பிரயாணத் தடைகளை விதிக்குமாறு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் அடிக்கடி வெளிநாட்டு தூதரகங்களை கோரி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (ஸ)


Add new comment

Or log in with...