குடியேறிகளுக்கு எதிராக மெக்சிகோவில் ஆர்ப்பாட்டம் | தினகரன்

குடியேறிகளுக்கு எதிராக மெக்சிகோவில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவுக்கு செல்ல முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான குடியேறிகள் மெக்சிகோ எல்லை நகரான டிஜுவானாவை அடைந்திருப்பதால் அந்த நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குடியேறிகளுக்கு டிஜுவானா நகரில் இருந்து தெற்கு கரோலினாவை நோக்கி செல்லும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ ஊடாக அமெரிக்காவை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் பயணித்து வருகின்றன. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோ தமது எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.

அடுத்து ஒருவாரத்தில் 10,000 குடியேறியர்கள் டிஜுவானா நகரை வந்தடைவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் இவர்களை கையாள்வதற்கு நகர் தயாராக இல்லை என்று அந்த நகர மேயர் ஜுவான் மனுவேல் கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே அடைக்கலம் பெற்றிருக்கும் குடியேறிகளை சமாளிப்பதில் அந்த நகரம் நெருக்கடியை சந்தித்து வருவதோடு நகர ஆளுநர் அரசிடம் உதவி கேட்டுள்ளார்.

இந்நிலையில் டிஜுவானா நகரில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான பிரசாரங்கள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.


Add new comment

Or log in with...