பாராளுமன்றத்தை மோதலின்றி முன்னெடுக்க சர்வகட்சி மாநாட்டில் கட்சித் தலைவர்கள் இணக்கம் | தினகரன்

பாராளுமன்றத்தை மோதலின்றி முன்னெடுக்க சர்வகட்சி மாநாட்டில் கட்சித் தலைவர்கள் இணக்கம்

ஜனாதிபதியின் சமாதான முயற்சிக்கு வெற்றி

 

பாராளுமன்றத்தினுள் அமைதியாகவும் வன்முறையைத் தவிர்த்தும் செயற்படுவது தொடர்பில் சர்வகட்சி மாநாட்டில் கட்சித் தலைவர்கள் ஒருமித்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இம்மாநாட்டில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தை மாற்றி அமைப்பது போன்ற மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் முடிவுகளை மேற்கொள்ளும்போது பாராளுமன்றத்தில் குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையாக அமையாது என தெரிவித்தார். அரசாங்கத்திற்கெதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தாம் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களை பெயர் சொல்லி அழைத்தோ அல்லது இலக்ரோனிக் முறையை பயன்படுத்தியோ சபையில் வாக்கெடுப்பை நடத்தவேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால இம்மாநாட்டில் கலந்துகொண்டன. எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது உரிய தீர்மானங்கள் எடுப்பதற்கும் பாராளுமன்றத்தினுள் அமைதியாகவும் வன்முறையைத் தவிர்த்தும் செயற்படுவது தொடர்பில் இம்மாநாட்டின் போது அனைவரும் இணக்கப்பாட்டிற்கு வந்தனர்.

இம்மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி:

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தாம் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டுமானால் முறையாக வாக்கெடுப்பு நடத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அத்தகைய நடவடிக்கை நாட்டின் புத்திஜீவிகளுக்கும் பொதுமக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த முறையாக அமையும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தை மாற்றி அமைப்பது போன்று முக்கிய விடயங்களின் போது சபையில் குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையாகாது என்றும் தெரிவித்தார்.

மேற்படி மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி கலந்துகொள்ளாமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக ஜனாதிபதி இதன்போது அங்கு தெரிவித்தார்.


Add new comment

Or log in with...