2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை | தினகரன்

2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை

2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை-2nd Test: SLvENG; Sri Lanka needs 75 runs to win

சிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, அஞ்சலோ மெத்திவ்ஸின் சிறப்பான ஆட்டத்தினால்  விறுவிறுவாப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

301 எனும் வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி போட்டியின் 4 ஆவது நாளான இன்று (17) மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டு இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரும் வேளையில், இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களைப் பெற்றது. நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளார்.

இலங்கை அணி சடுதியாக விக்கட்டுக்களை இழந்த வேளை திமுத் கருணாரத்ன உடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிய அஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை அணியின் வெற்றி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச்செய்தார்.

சிறப்பாக ஆடிய திமுத் இங்கிலாந்து அணியின் சிறப்பான களத்தடுப்புக்காரணமாக 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் மிக சிறப்பாக ஆடிய அஞ்சலோ மெத்திவ்ஸ் தேநீர் இடைவேளையின் பின்னர் ஆட்டமிழக்க இலங்கை அணியின் வேகம் தளர்வடைந்தது. மெத்திவ்ஸ் 88 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் களம் புகுந்த தில்ருவன் பெரேரா இன்றைய நாளின் இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்த வேளை போட்டி மழை காரணமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

இங்கிலாந்து அணி சார்பில் ஜெக் லீச் 4 விக்கெட்டுகளையும் மொயின் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு ஆதில் ரஷீத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 285+5/10 (75.4)

சேம் குர்ரன் 64 (119)
ஜோஸ் பட்லர் 63 (67)
ரொரி பேர்ன்ஸ் 43 (81)

தில்ருவன் பெரேரா 4/61
மலிந்த புஷ்பகுமார 3/89
அகில தனஞ்சய 2/80

இலங்கை 336/10 (103.0)
ரொஷேன் சில்வா 85 (174)
திமுத் கருணாரத்ன 63 (125)
தனஞ்சய டி சில்வா 59 (98)

ஜெக் லீச் 3/70
ஆதில் ரஷீத் 3/75
மொயின் அலி 2/85

இரண்டாம் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 
324/9 (76)

ஜோ ரூட் 124 (146)
ரோரி பர்ன்ஸ் 59 (33)
பென் போக்ஸ் 51* 

அகில தனஞ்சய 6/106 (23)
தில்ருவன் பெரேரா 2/87 (19)
மலிந்த புஷ்பகுமார 1/97 (26)

இலங்கை 226/7 (65.2)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 88 (137)
திமுத் கருணாரத்ன 54 (90)
ரொஷேன் சில்வா 37 (95)
நிரோஷன் திக்வெல்ல 27 (30)

ஜெக் லீச் 4/73 (23.2)
மொயின் அலி 2/65 (15)
ஆதில் ரஷீத் 1/52 (17)


Add new comment

Or log in with...