மஹிந்த, ரணில் பங்கேற்புடன் சர்வகட்சி சந்திப்பு ஆரம்பம் | தினகரன்

மஹிந்த, ரணில் பங்கேற்புடன் சர்வகட்சி சந்திப்பு ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,  சபாநாயகர் கரு ஜயசூரியவும் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் அண்மைக் காலமாக நிலவிவரும் அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...