மக்கள் விடுதலை முன்னணி கலந்துகொள்ளாது | தினகரன்

மக்கள் விடுதலை முன்னணி கலந்துகொள்ளாது

மக்கள் விடுதலை முன்னணி கலந்துகொள்ளாது-JVP Will Not Participate All Party Meeting

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (18) பிற்பகல் 5.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வகட்சி சந்திப்பில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் தற்பொழுது நிலவுகின்ற நிலைமைக்கு ஜனாதிபதியே  காரணம் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இதேவேளை தாம் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சர்வகட்சி தலைவர்களுடனான இச்சந்திப்பு, இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...