மகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை | தினகரன்

மகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை

மகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை-WWT20-SLWvWIW-WI Won-SL Knocked Out

மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான தோல்வியைத் தொடர்ந்து இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான போட்டியில் 83 ஓட்டங்களால் தோல்வியுற்றது இலங்கை மகளிர் அணி.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 187 எனும் இமாலய ஓட்டத்தைப் பெற்றது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கிய ஹெய்லி மெத்திவ்ஸ் 36 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். இது தவிர டீன்றா டோட்டின் 49 ஓட்டங்களையும் ஸ்டெப்னி டெய்லர் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் உதேசிகா , சசிகலா மற்றும் ஒசாதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து மாத்திரம் 44 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஏனைய வீராங்கனைகள் ஒற்றை ஓட்ட இலக்கத்துடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகியாக ஹெய்லி மெத்திவஸ் தெரிவு செய்யப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகள் மகளிர் 187/5 (20)
ஹெய்லி மெத்திவ்ஸ் 62 (36)
டீன்றா டொட்டின் 49 (35)
ஸ்டெப்னி டெய்லர் 41 (25)

உதேசிகா ப்ரபோதினி 1/37 (4)
ஓசாதி ரணசிங்ஹ 1/21 (4)
சசிகலா சிறிவர்தனா 1/46 (4)

இலங்கை மகளிர் அணி 104/10 (17.4)
சமரி அதபத்து 44 (35)

ஹெய்லி மெத்திவ்ஸ் 3/16 (4)
சகிரா செல்மன் 1/24 (4)
ஸ்டெப்னி டெய்லர் 1/14 (2)
டீன்றா டொட்டின் 1/13 (2)
சினால் ஹென்றி 1/15 (3)
அபி பெச்சர் 1/6 (1.4)


Add new comment

Or log in with...