ஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்: | தினகரன்

ஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:

கிரிக்கெட் சபை அறிவிப்பு

2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங் கேற்கமாட்டார்கள் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையான கிரிக்கெட் அவுஸ்திரேலியா (சிஏ) அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி மிகவும் பிரபல மான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு உலகக் கிண்ண அணியில் இடம் பெற்றுள்ள அவுஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎல் போட்டியில் பங் கேற்க மாட்டார்கள் என்று சிஏ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிஏ விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள் ளதாவது: உலகக் கிண்ண கிரிக் கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே 30-ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஐபிஎல் போட்டி யில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் பங் கேற்க முடியாத நிலை ஏற்படும்.

அதே நேரத்தில் நடப்பு உலகக் கிண்ண சம்பியன் என்பதால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உலகக் கிண்ண் போட்டிதான் முக்கியம் என்று சிஏ கருதுகிறது.

எனவே உலகக் கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 வீரர்கள், ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை உள்ளது. அவர் கள் ஐபிஎல் போட்டியில் பங் கேற்க இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...