ஆஸி புறப்பட்டது இந்திய அணி | தினகரன்

ஆஸி புறப்பட்டது இந்திய அணி

நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடக்கிறது. இதில் முதல் ஆட்டம் எதிர்வரும் 21-திகதி நடக்கிறது. 2-வது ஆட்டம் 23-ம் திகதியும், 3-வது ஆட்டம் 25-ம் திகதிகதியும் நடக்கிறது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் திகதி அடிலெய்டில் தொடங்குகிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் திகதி தொடங்குகிறது. முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 12-திகதி நடக்கிறது. அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுவதற்காக நேற்று இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றது.

அதிகாலையில் புறப்பட்ட விமானத்தில் இந்திய வீரர்கள் சென்றனர். முன்னதாக இந்திய தலைவர் விராட் கோலி நிருபர்களிடம் கூறும்போது, “துடுப்பபாட்ட வீரர்கள் பொறுப்புணர்வுடன் விளையாடி ஓட்டங்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். சூழ்நிலைக்கு ஏற்ப ஒருங்கிணைந்து விளையாடினால்தான் வெற்றி பெற முடியும். இப்போது நம்மிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களால் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என நம்புகிறேன்.

20 ஓவர் போட்டி: விராட்கோலி (தலைவர்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரி‌ஷப் பந்த், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

டெஸ்ட் போட்டி: விராட் கோலி (தலைவர் ), ரகானே, புஜாரா, ரோகித் சர்மா, முரளி விஜய், லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, விஹாரி, ரி‌ஷப் பந்த், பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது சமி, இஷாந்த் சர்மா.


Add new comment

Or log in with...